மதுரை அமலி பதின்ம மேனிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாமின் நிறைவு விழாவில் பள்ளியின் தாளாளர் ஞானசெளந்தரி சிஜசி மற்றும் பள்ளி முதல்வர்அமலா சிஜசி ஆகியோர் தலைமை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திக் தமிழாசிரியர், தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளி. “சுற்றுப்புறச் சூழலின் பசுமை! மனிதருக்கு வளமை!” என்ற தலைப்பில் திட்ட மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார்.
நாட்டு நலப்பணித் திட்ட மதுரை மாவட்ட தொடர்பு அலுவலர்கள் சு. நவநீத கிருஷ்ணன் மற்றும் சாம்ராஜ் ஹாரீஸ் வாழ்த்துரை வழங்கி, திட்ட மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
டிஜிட்டல் கல்வியறிவையும், சமூகப் பொறுப்பையும் வலியுறுத்திய இந்த சிறப்பு முகாம்,நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் ஆசிரியர்களின் அனுபவங்களோடு சிறப்பாக நிறைவுற்றது.