• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நாராயன் கைது…

Byகாயத்ரி

Sep 7, 2022

தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பொறுப்பேற்று பணியாற்றி வந்தவர் ரவி நாராயன். இதைத்தொடர்ந்து இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய பங்கு சந்தை நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிகிறது. இதனிடையே தேசிய பங்கு சந்தை வர்த்தகத்தில் பண மோசடி முறைகேடு தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நாராயன் பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பங்கு சந்தை அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்ட புகாரில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தை பொருத்தவரை 2013 முதல் 16ஆம் ஆண்டு வரை தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.