மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சினய சார்ந்த கோ. .புதுப்பட்டியில் தென் மாவட்ட மக்களின் மிகுந்த எதிர்ப்பான உலக தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணி ஜரூராக நடந்து வருகிறது. கடந்த 2019-ல் ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று மதுரையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர அடி பரப்பளவில் ரூ.2,021 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக 13.05 லட்சம் சதுர அடியில் மருத்துவக் கல்லூரி பிளாக்,நர்சிங் அகடமிக் பிளாக், அட்மின் பிளாக், மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 13 கட்டிடங்களும், 2 கட்டமாக 10.26 லட்சம் சதுர அடியில் ஆடிட்டோரியம் குடியிருப்பு கட்டடங்கள், இயக்குனர் பங்களா,ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆயுஷ் மருத்துவ பிரிவு உள்பட 16 கட்டிடங்கள் என்றுமொத்தம்29 கட்டிடங்கள் கட்டிடங்கள் கட்டுவது என்றுமதுரைஎய்ம்ஸ் நிர்வாகம் தீர்மானித்தது

முதல் கட்ட கட்டுமான பணி2026-ல் முடிக்க திட்டம்
இந்த நிலையில்கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி முதல் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் திட்டமிட்டப்படிமுதல் கட்ட கட்டிட கட்டுமான பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் தளம்,குறுங்காடு சூரிய மின்வசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி என்று பல்வேறு கட்டமைப்புகள் கொண்ட இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைய உள்ளதாக 3டி மூலம் எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி கட்டிங்கள் படம், வீடியோவை எய்ம்ஸ்மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.
இந்த நிலையில் முதற்கட்டமாக திட்டமிட்ட கட்டுமான பணிகள் 2026-ல் ஜனவரி மாதத்தில் நிறைவடையும். 2-ம் கட்டமாக திட்டமிட்ட கட்டுமான பணிகள் வருகின்ற 2027-ல் முடிக்க இலக்கு. 2026 -ல் ஜனவரி மாதத்தில் புதிய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் அனுமந்தராவ் தெரிவித்து இருந்தார். அவர் கூறியபடிமுதற்கட்ட கட்டுமானபணிகள் யாவும் அதிக வேகமாக நடந்து வருகிறது. அதில் ஆயிரக்கணக்கானதொழிலாளர்கள் இரவு, பகலாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 6க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது
பிரதமர் நரேந்திர மோடி

ஆகவே எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்தராவ் ஏற்கனவே கூறியபடி இந்த ஆண்டில் (2026-ல்ஜனவரி மாதம்) நடப்பு மாதத்தில்எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்த மாதம்இறுதியில் பாரத பிரதமர்நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளார். அவர் சென்னை அல்லதுமதுரையில்நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்றும்,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்யக்கூடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. .பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம்முருகன் கோவிலுக்கு வரும் பட்சத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் ராமநாதபுரத்தில் படித்து வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்கள் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திரமோடி எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் முதற்கட்டமான எய்ம்ஸ் கட்டுமான பணி முடிந்துவிட்டது என்றும்,அதற்காக திறப்பு விழா தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும் எய்ம்ஸ்மருத்துவமனையை இந்த மாதத்தின் இறுதியில்பிரதமர் நரேந்திர மோடி திறப்பார் என்றஅதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
பாக்ஸ செய்தி – 1
ஜனவரி 2019 முதல் ஜனவரி 2026 வரை
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காககடந்த 2019-ல் ஜனவரி மாதம்27-ந் தேதி அன்றுபாரத பிரதமர்நரேந்திர மோடி நேரடியாக மதுரையில் அடிக்கல் நாட்டினார். வருகின்ற 27-ந்தேதியுடன் கிட்டதட்ட 6 ஆண்டுகள் முடிந்துவிட்டது.இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அதன் நிர்வாகம் திட்டமிட்டபடி முதற்கட்ட பணிகள் நிறைவு பெரும் நிலையில் உள்ளது மேலும் 2-ம் கட்டமானபணிகள் யாவும் 2027-ல்முடிப்பதற்கு இலக்கு உள்ளதாகஎய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது




