சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் தொமுச சார்பில் பெயர் பலகை மேலூர் அல்போன்ஸ் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் தொமுச சார்பில், நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் சார்பில், கொடியேற்றி பெயர் பலகை திறப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை மண்டல பொதுச் செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கலந்து கொண்டு கொடியேற்றி பெயர்ப்பலகை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சங்கத் தலைவர் காத்த சுரேஷ், மத்திய சங்க பொருளாளர் மணிகண்டன், துணைப் பொதுச் செயலாளர் முத்துக்குமார், அய்யனார், சோழவந்தான் கிளை நிர்வாகிகள், தலைவர் அமிர்தராஜ், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் பாலமுருகன், துணைத்தலைவர் சக்திவேல், துணைச் செயலாளர் தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, பொன்ராம், செந்தில், முத்துக்கிருஷ்ணன், பிரேம்குமார் மத்திய சங்க பிரச்சாரசெயலாளர் கஜேந்திரன், அமைப்புச் செயலாளர் ஹபிப் முகமது, பிரச்சார செயலாளர் மேலக்கால் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
