நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த எலந்த குட்டை பாதரை சவுதாபுரம் பகுதி மக்களுக்காக இன்று மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி செல்வம், எலந்த குட்டை ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், சவுதாபுரம் ஊராட்சி தலைவர் ஜெயந்தி நந்தகோபால், பாதரை துணைத்தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை சிறப்பாக வழி நடத்தி சென்றனர்.









