• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காதலித்த ராகவ்வை கரம்பிடித்தார் நக்ஷ்த்திரா

பொழுதுபோக்கு தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் நக்ஷத்திரா நாகேஷ். கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இன்று( 9.12.2021) இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த சில தினங்களாக தனது திருமண கொண்டாட்டங்கள் தொடர்பான போட்டோ, வீடியோக்களை தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தார் நக்ஷத்திரா. குறிப்பாக சங்கீத், மெஹந்தி தொடர்பான நிகழ்வுகள் குறித்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். திருமணம் முடிந்த நக்ஷத்திரா – ராகவ் தம்பதியருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.