• Tue. Jan 6th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நைனார் நாகேந்திரன் நிறைவு நாள் நிகழ்ச்சி..,

Byமுகமதி

Jan 5, 2026

இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடுகளையும் ஆட்சி முறைகளையும் அதற்காக பங்காற்றி வரும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை விளக்கியும் தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள் பிரச்சார பயணம் மேற்கொண்டு வந்தார்.

மதுரையில் தொடங்கிய இந்தப் பிரச்சாரமானது நேற்று இரவு புதுக்கோட்டையில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிகழ்வில் கதாநாயகனாக விளங்கிய நைனார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர்கள் எச். ராஜா, பொன்னார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், நட்சத்திரப் பேச்சாளர் வானதி சீனிவாசன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசிய இந்த நிகழ்வில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் அமித் ஷா மேடைக்கு வந்து மைக் பிடித்த உடன் தொண்டர்களின் கோஷம் அதிர்ந்தது. மேலும் தொண்டர்கள் தங்கள் கையில் வைத்திருந்த காவித்துண்டை தலைக்கு மேல் சுற்றி தங்களது மகிழ்ச்சி ஆரவாரத்தை தெரிவித்தனர். அதைப் பார்த்த அமித்ஷா இன்னும் சத்தமாக இன்னும் சத்தமாக என்று சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் என்டிய கூட்டணி அமைக்க வேண்டுமா வேண்டாமா என்று கேள்வி கேட்டார். வேண்டும் வேண்டும் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து பேசிய அமித்ஷா பாரதப் பிரதமர் மோடி தலைமையில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைய வேண்டும். அதற்காக உங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துங்கள். கைகளை உயர்த்துங்கள். உரத்த குரலில் முழக்கம் செய்யுங்கள்.

இந்த தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். தமிழ்நாட்டின் இந்த புனிதமான மண்ணை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டின் சாம்ராஜ்யமாக இருந்த புதுக்கோட்டை மண்ணை வணங்குகிறேன். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் என் டி ஏ கூட்டணியின் ஆட்சி மலரும். இந்த மாபெரும் சபையில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு மாபெரும் அறைகூவல் விடுக்கிறேன். வாருங்கள் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் அணிவகுப்போம். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கியது. இந்த பயணத்தின் மூலம் தமிழ்நாட்டில் அனைத்து மக்களையும் தொடர்பு கொள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அண்ணா திமுகவும் இன்னும் பிற கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து இங்கு ஆட்சி அமைக்கப் போகிறோம்.
மக்களே கொஞ்சம் கவனமாக கேளுங்கள். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கும் மாநிலங்களில் ஊழல் நிறைந்த ஆட்சி என்றால் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் உள்ள இந்த ஆட்சிதான்.

தேர்தல் அறிக்கையிலே அளித்த வாக்குறுதிகளில் மிக குறைவான வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி இருப்பதும் திமுக தலைமையிலான இந்த ஆட்சிதான். தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்களுக்கு இங்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை. திமுக அரசின் ஒரே நோக்கம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை முதல்வர் ஆக்குவது ஒன்றுதான். தமிழ்நாட்டின் ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணி இது ஒரு வெற்றிக் கூட்டணி. 1998 ஆம் ஆண்டு நாம் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். 2019 ஆம் ஆண்டிலும் நாம் ஒன்றாக இணைந்து தேர்தலில் களம் கண்டோம். 2024 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் அதிமுகவும் தனித்தனியாக போட்டிருக்கிறோம். இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகளை கூட்டி பார்த்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். நமது கட்சியைப் பற்றி மு க ஸ்டாலின் தொன்மையான தமிழுக்கு எதிரான கட்சி பாஜக என தவறான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் நமது அரசாங்கம் தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற தேர்வுகளில் தமிழை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ரயில் நிலையங்களில் தமிழிலே அறிவிப்பு செய்வதும் நம்முடைய மோடி அவர்கள் தான் ஏற்பாடு செய்திருக்கிறார். வாரணாசி பல்கலைக்கழகத்தில் நம்முடைய பாரதியார் பெயரில் நமது பாரத பிரதமர் மோடி ஒரு இருக்கை அமைத்திருக்கிறார். நமது வேதமான திருக்குறளை 13 மொழிகளிலே மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். உயர்கல்வியிலே தமிழிலே தேர்வுகளை எதிர்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார். இத்தனை ஆண்டு காலமும் திமுகவும் காங்கிரஸ் அரசும் செங்கோலை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்து வைத்திருந்தார்கள். ஆனால் நமது பிரதமர் தான் அந்த செங்கோலை இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அழகு பார்க்கிறார். பாரத நாட்டின் துணை குடியரசுத் தலைவராக நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை பதவியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறார்.

சகோதர சகோதரிகளே திமுக அரசு ஊழலுக்கான அரசாக ஊழல் ஆட்சியாக அடையாளப் படுத்தப்பட்டு இருக்கிறது. எங்க ஊழல் எப்படி நடந்திருக்கிறது என்றால் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலையிலே ஒரு தலைவரின் பெயர் அடிபட்டு இருக்கிறது. மணல் அள்ளி விற்கும் ஊழலிலும் ஒரு தலைவர் பெயர் அடிபடுகிறது. ஒரு தலைவரின் பெயரில் 6000 கோடி ஊழல் செய்திருப்பதாக தொடர்பு படுத்தி பெயர் வெளியில் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை வைத்துக்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சி காண முடியுமா? தமிழ்நாட்டில் நடைபெறும் பணிகளில் 20 சதவீதம் எனக்கு கட்டிங் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் நிலைமை நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வரவு செலவு டாஸ்மாக் வருமானத்திலும் ஒட்டுமொத்த கடனிலும் தான் இயங்குகிறது. சகோதர சகோதரிகளே தமிழ்நாடு எந்த அளவுக்கு மோசமான அரசாக செயல்படுகிறது என்பதற்கு அரசு ஊழியர்களே வீதியில் இறங்கி போராடுகிறார்கள் என்பதிலேயே தெரிய வருகிறது. போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 1300 பெண் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்களும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

விவசாயிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை கொடுமைப்படுத்துகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். திமுக அரசாங்கம் தமிழ்நாட்டை எப்படி ஆக்கி இருக்கிறார்கள் என்றால் மற்ற மாநிலங்களில் குப்பை கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் குப்பை கிடங்காக மாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களாகிய இந்துக்களுக்கும் மற்ற மதங்களை சார்ந்தவர்களுக்கும் அவர்களது கடவுள் நம்பிக்கையை முடிவு கட்டும் விதமாக செயல்பட்டு வருகிறது. அயோத்தியில் ராமர் ஆலய பூமி பூஜையின் போது தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. திமுகவின் மூத்த தலைவரான பெரியார் சனாதானத்தை மலேரியா டெங்கு இவற்றோடு ஒப்பிட்டார். இந்துக்களின் ஊர்வலங்கள் என்றால் அதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

நமது மூர்த்திகளை நீர்நிலைகளில் கரைக்கச் சென்றால் ஊர்வலங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இதன் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள் அரசியல் சாசனத்தின் மாண்பை குறைத்து இருக்கிறீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் அரசு பல கட்டமைப்புகளை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மத்தியில் யார் ஆட்சி செய்தார்களோ அவர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி 53,000 மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. நான் பட்டியல் முழுவதையும் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு ஒப்பீடு செய்வோமா..
2004 முதல் 2014 வரை உள்ள லட்சம் கோடியே 53,000 ஒரு பக்கம். 2014 முதல் 2024 வரை மோடி தமிழ்நாட்டுக்கு வழங்கியிருக்கும் தொகை 11 லட்சம் கோடி. 2024 முதல் மோடி அரசு தொடர்ந்து வெற்றிப் பயணத்தை நடத்தி வருகிறது.

நமக்கு மிகவும் பிரியமான மோடி அவர்கள் 2024 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து ஒரிசாவில் முதன்முதலாக நமது பாஜக அரசு ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து ஆந்திராவில் ஆட்சியமைத்தது. 2025 ஆம் ஆண்டு ஹரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதே ஆண்டில் தான் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது. அதே ஆண்டில் பீகாரில் இந்தியக் கூட்டணி மண்ணைக் கவ்வியது. இப்போது 2026. இது தமிழ்நாட்டின் முறை. இந்த ஆண்டு தமிழ்நாட்டிலும் வங்காளத்திலும் வெற்றியை கொண்டாட இருக்கிறோம். இங்கே குழுமியிருக்கும் காரிய கர்த்தாக்கள் ஒரு உறுதியான நிலைப்பாட்டோடு இங்கிருந்து பயணிக்க வேண்டும். மேற்கு வங்காளத்திலும் தமிழ்நாட்டிலும் இன்று பெரும்பான்மையை பெறவேண்டும். இங்கு நீங்கள் ஒலிக்கும் குரல் சார்ஜ் கோட்டையை எட்ட வேண்டும் என்று பேசினார்.