நாகர்கோவிலில் மத்திய அரசின் பள்ளி நிர்வாகத்தில் உள்ள கேந்திரியா வித்தியாலயத்தில் ஆண், பெண் என ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவிகள் எல்லாம் அரசின் உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகள், பெரும் பணம் படைத்த வீட்டை சேர்ந்தவர்கள்.
மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த பள்ளியில் ராஜஸ்தானை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க ராமசந்திர சோனி என்பவர் பல ஆண்டுகளாக பணி யாற்றி வருகிறார். இவர் பாடம் நடத்தும் 8_வகுப்பு மாணவிக்கு இந்த கல்வி ஆண்டின் துவக்கத்திலிருந்தே பாலியல் தொல்லை கொடுத்த நிலையில். ஆசிரியர் ராமசந்திர சோனியின் அத்துமீறல் அதிகமான நிலையில் . மாணவி பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில் பள்ளி நிர்வாகம் ஆசிரியரை எச்சரிக்கிறோம்,இனிமேல் இப்படி நடக்காது, இதுகுறித்து வெளியில் சொல்லவேண்டாம் என அப்போதைக்கு சமாதானம் செய்து பெற்றோர்களை அனுப்பிய பின்னும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறிப்பிட்ட மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்த நிலையில்.
மாணவியின் பெற்றோர்கள் நாகர்கோவில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் கேந்திரியா பள்ளி நிர்வாகம் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் புகார் கொடுத்த நிலையில்.மகளிர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரணை செய்த போது கடந்த சனி, ஞாயிறு, திங்கள் பள்ளிக்கு விடுமுறை குற்றச்சாட்டப்படும் ஆசிரியர் விடுமுறை என்பதால் ராஜஸ்தான் போய் உள்ளார் என்ற ஒற்றை பதிலில் காவல்துறையை அனுப்பி விட்டனர். நேற்று பள்ளி திறந்ததும், மாணவியின் பொற்றோர்கள்,பெண் காவலர்களுடன் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் பள்ளிக்கு சென்று புகார் செய்த நிலையில். பள்ளி நிர்வாகம் எங்கள் பள்ளி வளாகத்தில் எவ்விதமான தவறும் நடக்கவில்லை என மருத்து குற்றவாளியான ஆசிரியரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் பெண் காவலர்கள் தொடர்ந்த விசாரணையில் ஆசிரியர் குற்றம் செய்தது தெரிய வந்த நிலையில். சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராமசந்திர சோனி மீது 4 சங்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து இன்று(ஆகஸ்ட்_28)ம் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இன்மை ஏற்பட்டுள்ளது என்ற கருத்து குமரி மாவட்டத்தில் பரவலாக பரவிவருகிறது.