நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த அக்ரஹாரம் நாட்டான்கவுண்டன் புதூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ நாகர்புற்று திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடா வருடம் ஆடி மாதம் நாகபஞ்சமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதனை எடுத்து இன்று 41-ஆம் ஆண்டு நாகபஞ்சமி பெரும் பூஜையுடன் தொடங்கப்பட்டு தொடர்ந்து நாக பஞ்சமி யாகம் மற்றும் மூலமந்திரம் ஹோமம், மங்களத்ரவ்ய அபிஷேகம், பூர்ணாஹூதி, விக்னேஸ்வர பூஜை, கலச ஆவாஹாணம், சங்கல்பம், புண்ணியாகம், கலச அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.

இதில் அப்பகுதி சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பெண் பக்தர்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு சுவாமி பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது.
பூஜையில் கலந்து கொள்வதின் பயனாக ஜாதகரீதியாக (ராகு,கேது) தோஷம் நிவர்த்தி, திருமணத்தடை நீங்குதல், புத்திர சந்தான பாக்கியம், பகை, கண் திருஷ்டி விலகுவதாக ஐதீகம். கோயில் நிர்வாகம் சார்பில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.
