உசிலம்பட்டி நகராட்சி சார்பில் எனது குப்பை, எனது பொறுப்பு மரக்கன்றுகள் நட்டு உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் சார்பில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் கவுண்டன்பட்டி சாலையில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி அருகில் குப்பைகளால் பாதிக்க கூடிய பள்ளியை (GVP Point) சுத்தம் செய்ய பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய இடமாக மாற்றி தண்ணீர் பந்தல் வைத்து நகர மன்ற தலைவர் பொறுப்பு தேன்மொழி தலைமையில், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் முன்னிலையில் மரக்கன்று நட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இதில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவிகள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.