தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்துஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல தமுமுக சார்பாகநாகூர் கடற்கரையில் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பாலஸ்தீன மக்களுக்காகவும், நாட்டுமக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கும் சிறப்பு பிரார்த்தனை நாகூர் தர்காவில் செய்யப்பட்டது என தர்ஹா பரம்பரை கலீபா மஸ்தான் சாஹிப் தெரிவித்துள்ளார்.
