மதுரையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் பர்கா உடை அணிந்து தனது மகனுக்கு கிருஷ்ணன் வேடமிட்டு சாலையில் சென்ற போது பொது மக்களுடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
மதுரையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் பர்கா உடையணிந்து தனது மகனின் கையைப் பிடித்து கொண்டு ,சிறிய கிருஷ்ணர் போல உடையணிந்து வேடமிட்டு பழங்காநத்தம் பகுதியில் இருந்து காலையில் அழைத்து சென்றர் அப்போது பொதுமக்கள் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் மக்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் பர்கா அணிந்து தனது மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு சாலையில் சென்றபோது இதை பார்த்த அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்து முஸ்லீம் மதத்தின் மத்தியில் ஒற்றுமையாக இருந்து வரும் வகையில் இந்தக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





