நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி மேற்கு அச்சக்கரை கிராமத்தில் தாய் தந்தையை இழந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிவாஜி என்பவரின் மகன் கனகராஜ் தனியே வசித்து வருகிறார்.

புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று சொல்லக்கூடிய இவர் அந்த பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டில் கல்லைவிட்டு எறிந்து இடையூறு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கனகராஜ் வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய மகன் விக்னேஷ்வரன் இருவரும் ஆயுதத்துடன் கனகராஜை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அண்ணன் என்று கதறியபோதும் கட்டையை கொண்டு கடுமையாக தாக்கிய விக்னேஷ்வரன் அங்கிருந்து புறப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.