இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் முப்பிடாவதி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைசாமிபுரம் பகுதியில் 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் வெகு விமர்சையாக 13 சமுதாயம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டு இன்று அதிகாலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வருகிற பத்தாம் தேதி பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

பெண்கள் கும்மியடித்து வழிபாடு செய்தல் முளைப்பாரி அக்னிசட்டி எடுத்தும் தங்களுடைய நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள் பத்தாம் நாள் திருவிழாவில் இந்த பகுதி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள் விழா ஏற்பாடுகளை தலைவர் எம் ஆர் வெங்கடேசன்.செயலாளர் செ .முருகன்.பொருளாளர் சி ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் இன்று நடைபெற்ற கொடியேற்று விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.