மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் மற்றும் புனித மாதங்களில் ஒன்றாகும். இமாம் ஹுசைன் மற்றும் கர்பாலாவில் அவரது தியாகத்தை நினைவு கூறுகிறார்கள். முஸ்லீம்கள் மொஹரம் மாதத்தை ஒரு புனித மாதமாக கருதுகின்றனர் மற்றும் பல நல்ல செயல்களைச் செய்கிறார்கள்.

இந்த மாதத்தில், சண்டை மற்றும் போர் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் “ஆஷுரா” என்று அழைக்கப்படுகிறது, இது இஸ்லாத்தில் ஒரு முக்கியமான நாள் ஆகும். முஹர்ரம் மாதத்தில் நபிமார்கள் வாழ்வில் நிகழ்ந்த பல வரலாற்று சரிதைகளை அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கின்றான்.
இறைவனால் தடுக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டதால் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம்-ஹவ்வா ஆகியோர் தங்கள் செயலுக்கு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். அல்லாஹ், அவர்களை மன்னித்து தூய்மைப்படுத்தியது இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாக அமைந்துள்ளது. மொஹரம், முஸ்லிம்களுக்கு ஒரு முக்கியமான மத மற்றும் கலாச்சார நிகழ்வாகும், மேலும் இது அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இதனை ஒட்டி நாகூர் தர்காவில் உள்ள யா ஹூசைன் பள்ளியில் நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக ஹஸ்ரத் இமாம் ஹசன் ரலி ஹசரத் இமாம் ஹுசைன் ரலி ஆகுவார் பெயரில் பாத்திஹா நடைபெற்றது. பின்னர் பல தானியங்கள் போட்டு சமைக்கப்பட்ட சாப்பாடு தப்பருக்காக வழங்கப்பட்டது. நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது காஜி ஹுசைன் சாஹிப், பரம்பரை டிரஸ்டிகள் சுல்தான் கலிபா சாகிப், அபுல் பதஹ் சாகிப், செய்யது முகமது கலிபா சாகிப், ஹாஜா நஜிமுதீன் சாகிப், சுல்தான் கபீர் சாகிப், பாக்கர் சாகிப், செய்யது யூசுப் சாகிப், சேக் ஹசன் சாகிப் உள்ளிட்ட பரம்பரை அறங்காவலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக அரபு மொழியில் துக்க கவிதை வாசிக்கப்பட்டது இதனை மரூசியா என்று அழைக்கின்றனர். நாகூர் முக்கிய வீதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று இதனை ஓதியவரே இஸ்லாமியர்கள் சென்றனர். நாகூர் தர்கா கிழக்கு வாசலில் காலை 10:30 க்கு தொடங்கிய இந்த நிகழ்வு நாகூர் கடற்கரையில் பகல் 12 30 மணி அளவில் முடிவடைந்தது.