தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரர் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் தமிழ்நாடு முதலமைச்சரின் #தாயுமானவர்_திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை அருகே திடல் ஊராட்சி ரெத்தினபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் திருமதி. அழகுமீனா இ.அ.ப அவர்களுடன் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ மகேஷ் அவர்கள் வயது முதிர்ந்தோர் இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்கள்.
உடன் அரசு துறை அதிகாரிகள், ஒன்றிய செயலாளர் பிராங்களின், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம்பிள்ளை, தகவல் தொழில்நுட்ட அணி நிர்வாகி ஆஸ்டின் பெனட் உட்பட பொதுமக்கள் பலர் இருந்தனர்.