மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார்., தலைமையில் நடைபெற்றது.,

வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களிடம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை சார் ஆட்சியர் மூலமாக வைத்தனர்.,
உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்தும், மூன்றே நாட்களில் போதிய நீர் பற்றாக்குறையால் நீர் திறப்பு நிறுத்தப்பட்ட சூழலில், அடுத்து அணை நிரம்பும் போது உரிய ஆய்வு செய்து முன்னுரிமை அளித்து நீர் திறந்தால் குடிநீர் ஆதாரத்திற்காவது பயன்பெறும் எனவும்,
உசிலம்பட்டி கண்மாய் பகுதியில் நகராட்சியின் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் எனவும், குப்பைகளை தீயிட்டு எரிப்பதை தடுக்க வேண்டும், நாய் தொல்லைகளை சரி செய்ய வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.,
அடுத்தடுத்த கூட்டங்களுக்கு வரும் போது ஒவ்வொரு விவசாயிகளும் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கும் பட்சத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண உதவும் என சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.,

மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இத்தனை ஆண்டுகளாக வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் தலைமையில் நடைபெற்று வந்த சூழலில், உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் ஐ.ஏ.எஸ்., பதவியுடன் சார் ஆட்சியராக உட்கர்ஷ் குமார் பொறுப்பேற்ற காரணத்தால், முதன்முறையாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது.,
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடப்பதை போல உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்திலும் சார் ஆட்சியர் முன்னிலையில் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் எனவும், அரசு அலுவலர்களும் இனி வரும் காலங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் சார் ஆட்சியர் தெரிவித்தார்.,




