• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாடத்திட்டத்தில் சிலம்பம் கலை இணைக்கப்படும்…. மெய்யநாதன்

Byகாயத்ரி

Jun 11, 2022

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஒரு தற்காப்புக் கலையாக சிலம்பம் உள்ளது. கம்பு சுற்றுதல் என்று கிராமப்புறங்களில் இதைக் கூறுகிறார்கள். ஒரு நீண்ட கம்பை கையில் எடுத்து கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே இதன் அடிப்படையான நோக்கமாகும். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதன் முதலில் கையில் எடுத்த ஆயுதம் கம்பு தான். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்ட வீரர்களுக்கும் இடம் வழங்கப்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவர்களிடம் சிலம்பகலை கொண்டு செல்ல பாடத் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.