• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் MMTC-PAMP-ன் புதிய கிளை துவக்கம்..,

ByM.S.karthik

Sep 1, 2025

இந்தியாவின் ஒரே LBMA-அங்கீகாரம் பெற்ற தங்கம் மற்றும் வெள்ளி சுத்திகரிப்பு நிறுவனமான MMTC-PAMP, தமிழ்நாட்டின் மதுரையில் முதல் தூய்மை சரிபார்ப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இதனை ஜோஸ் அலுக்காஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வர்கீஸ் அலுக்காஸ் மற்றும் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் பா.ரமேஷ் திறந்து வைத்தனர். MMTC-PAMP நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி மற்றும் CFTO சமித் குஹா மற்றும் பிற அதிகாரிகள் உடனிருந்தனர்.

மதுரையில் திறக்கப்பட்டுள்ள புதிய தூய்மை சரிபார்பு மையம், MMTC-PAMP இன் இந்தியா முழுவதும் வளர்ந்து வரும் பிரத்யேக விற்பனை நிலையங்களின் சங்கிலியில் மேலும் ஒரு சேர்க்கையாக இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுவிஸ் கைவினைத்திறனுடன் தடையற்ற சில்லறை விற்பனை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.தூய்மை சரிபார்ப்பு மையங்களின் வெற்றியைத் தொடர்ந்து மதுரையில் திறக்கப்பட்டுள்ள புதிய பிரத்யேக ஸ்டோர் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்தை நிபுணத்துவத்துடன் மதிப்பீடு செய்து MMTC-PAMP இன் வெளிப்படையான செயல்முறை மூலம் மீண்டும் விற்க வாய்ப்பளிக்கும்.

ரெஸ்பான்சிபிள் ஜுவல்லரி கவுன்சில் சான்றிதழின் மூலம், வெளிப்படைத் தன்மை கூடுதலாக உறுதி செய்யப்படுகிறது.இந்த மதிப்பீடு, MMTC-PAMP நிறுவனத்தின் முன்னேற்றமான தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம், பாரம்பரிய டச் ஸ்டோன் (Touchstone) முறையில் ஏற்படும் மதிப்பு இழப்பின்றி, மிகுந்த துல்லியத்துடன் தங்கத்தின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு MMTC-PAMP தயாரிப்பும் மிக உயர்தரமான சுவிஸ் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டதுடன், இந்தியாவின் பண்பாட்டு செழுமையை பிரதிபலிக்கும் பாரம்பரிய வடிவங்களையும் கொண்டுள்ளது.

திறப்பு விழாவில், MMTC-PAMP நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி மற்றும் CFTO சமித் குஹா பேசுகையில், “மதுரையில் எங்கள் தூய்மை சரிபார்ப்பு மையம் தொடங்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் எங்கள் சில்லறை வணிகப் பங்களிப்பை விரிவுபடுத்தும் ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த புதிய பிரத்யேக ஸ்டோர் மூலம், நகைக் கடைக்காரர்களும், நுகர்வோர்களும் எங்கள் முன்னேற்றமான தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் அடிப்படையிலான தங்க மதிப்பீடு மற்றும் சுத்திகரிப்பு நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தக் கடையின் மூலம், மதுரையில் உள்ள நுகர்வோருக்கு இந்தியாவின் தூய்மையான 24K 999.9+ தங்கம் மற்றும் வெள்ளி தயாரிப்புகளை நேரடியாக அணுகும் வாய்ப்பையும் வழங்குகிறோம்” என்றார்.