விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது ஐந்து மாத ஊதியத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புது துணிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

ராஜபாளையம் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மற்றும் மருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகத்தில் உள்ள 235 ஆதரவற்ற குழந்தைகளுக்கு கடந்த எட்டு வருடங்களாக தீபாவளிக்கு புத்தாடை வழங்குவது போல் தற்போதும் 9-வது முறையாக அக்குழந்தைகளை ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானாவில் அமைந்துள்ள தனியார் ஜவுளி கடைக்கு அழைத்து சென்ற சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் தனது ஐந்து மாத ஊதியத்திலிருந்து ( ரூபாய் 5,25,000) குழந்தைகளுக்கு பிடித்தமான புத்தாடையை வாங்கி வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராமமூர்த்தி, மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
