சிவகாசி தொகுதியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததற்கு, முதலமைச்சருக்கு, எம். எல். ஏ. அசோகன் நன்றி தெரிவித்தார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதி திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.46.50 கோடி நிதி ஒதுக்கியும், சிவகாசி சுற்று வட்ட சாலை 2வது கட்ட பணிகளுக்கு (விருதுநகர் சாலை – சாத்தூர் சாலை இணைப்பு) ரூ.250 கோடி நிதி ஒதுக்கியும் ஏற்கனவே சிவகாசியில் இருந்து சாட்சியாபுரம் செல்லும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு தேவையான நிதி ஒதுக்கியதற்கும் சிவகாசி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து நிறைவேற்றித் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
நன்றி தெரிவித்ததோடு, சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும், நாடார் மகாஜன சங்கம் வெள்ளைசாமி நாடார் கல்லூரி தலைவருமான அரசன் அசோகன், மேலும் சிவகாசியில்
ESI மருத்துவ கல்லூரி துவக்க கோரிக்கை வைத்தார்.