அரியலூர் மாவட்டம் செந்துறையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்,உலகப் புகழ் பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கூட்டரங்கில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய நிகழ்வு எல்ஈடி திரை மூலம் காணொளி காட்சியாக ஒளிபரப்பப்பட்டது.

அதனை போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திமுக நிர்வாகிகளுடன் கண்டுக்களித்தார்.இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர்கள் பூ செல்வராஜ், வி.எழில்மாறன், பொன் செல்வம் , உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்துஅரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்திலும் , அந்நிகழ்வின் காணொளி காட்சி எல்ஈடி திரை வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.

நேரடி காணொளி காட்சி நிகழ்வில், மாவட்ட திமுக துணைச் செயலாளர் அருங்கால் சி சந்திரசேகரன், ஒன்றிய திமுக செயலாளர்கள் மா அன்பழகன், தெய்வ இளையராஜன் , கோ அறிவழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா பாலு,நகர திமுக செயலாளர் இரா முருகேசன்,அரசு வழக்கறிஞர் சி சின்னத்தம்பி உள்ளிட்ட அரியலூர் ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சரின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சிறப்புரையினை கண்டுகளித்தனர்.














; ?>)
; ?>)
; ?>)