புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் உள்ளம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் இரண்டு அமைச்சர்கள் சேர்ந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினர்கள்.

தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டையில் இயங்கி வரும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி ஆகியவற்றில் மடிக்கணினிகளை கனிமவளத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் , புதுக்கோட்டை மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா ஆகியோர் இணைந்து வழங்கினார்கள். அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை வகித்தார்.
மன்னர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருணா இந்நிகழ்வு குறித்து கூறுகையில் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் 1235 மாணவிகளுக்கு மடிக்கணினிகள் கடந்த ஐந்தாம் தேதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 228 மாணாக்கர்களுக்கும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் 1376 மாணாக்கர்களுக்கும் அறந்தாங்கி மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய ஊர்களில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 445 மாணாக்கர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

எனவே இந்த மடிக்கணினியை பயன்படுத்தி மாணாக்கர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் 3284 மாணவர்களுக்கு தற்போது மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இதர அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து கல்லூரிகளுக்கும் கலை மற்றும் அறிவியல் வேளாண்மை மருத்துவம் டிப்ளமோ ஐடிஐ ஆகிய 18 கல்லூரிகளில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவர் மாணவிகளுக்கு 5674 விலை இல்லா மடிக்கணினிகள் ஜனவரி ஒன்பதாம் தேதிக்குள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




