கோவை, சுந்தராபுரம் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தனது நண்பருடன் மினி வேனில் குறிச்சி குளக்கரையில் பெட்ரோல் பங்குக்கு நேற்று இரவு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றார்.

பெட்ரோல் நிரம்பியதும், வேனை ஸ்டார்ட் செய்தார். அப்பொழுது திடீரென அந்த மினி வேனில் இருந்து புகை வந்தது. இதனால் அந்த மினி வேனுக்குள் இருந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மினி வேனை விட்டு கீழே இறங்கியதுடன் வேனை சிறிது தூரம் நகர்த்தி விட்டனர்.
அப்பொழுது அந்த மினி வேன் தீப்பிடித்து எறிய தொடங்கியது. அந்த பகுதியில் காற்று வேகமாக வீசியதால், தீ மளமளவென பிடித்து மினிவேனின் மற்ற பகுதிகளுக்கு பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு இருந்த தீ கட்டுப்பாட்டு கருவியில் உள்ள பவுடரை தீப்பிடித்து எரிந்த மினி வேனின் மீது பீச்சு அடித்தனர் . ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்து கோவை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் அந்த மினிவேன் முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெட்ரோல் பங்கில் பரபரப்பு ஏற்படுத்தியது.