• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மினி வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் காயம்..,

ByKalamegam Viswanathan

Dec 10, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி செல்லும் வழியில் முனியாண்டி கோவில் அருகே மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் கிராமத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதிக்கு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்ற மினி வேன் தலை குப்புற கவிழ்ந்ததில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இதுகுறித்து கேள்விப்பட்ட சோழவந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலைக்குப்புற கிடந்த பேருந்து மற்றும் காயம் பட்டவர்களை பற்றி விசாரணை மேற்கொண்டதில் பேருந்து ஓட்டி வந்த டிரைவர் வளைவில் திரும்பும்போது பேருந்து தலைக்குப்பற கவிழ்ந்ததுதெரியவந்தது மேலும் பேருந்து விபத்துக்குள்ளான உடன் விபத்தில் சிக்கியவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தும் உரிய நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வராததால் காயம் பட்டவர்கள் ஒவ்வொருவராக அந்த பகுதியில் இருந்து வந்த இரு சக்கர வாகனங்களில் ஏறி மருத்துவமனைக்கு சென்றதும் பின் மீதி இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வந்தவுடன் அதில் மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவந்தது இது குறித்து போலீசார்மேலும் விசாரித்து வருகின்றனர்…