மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி அரியலூரிலுள்ள அவர்களது சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக,மங்காய் பிள்ளையார் கோயில் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் , அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை களுக்கும் , அதனை தொடர்ந்து செட்டியேரி க்கரை பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கும், முன்னாள் அரசு தலைமை கொறடா , மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை எஸ். இராஜேந்திரன் தலைமையில் முன்னாள் எம்பி ஆ.இளவரசன், முன்னாள் எம்எல்ஏ ப.இளவழகன், மாவட்ட நிர்வாகிகள் பவானி, அன்பழகன், சார்பு அணிநிர்வாகிகள் ஓபிசங்கர், ந .பிரேம்குமார், சிவசங்கர், ஜீவா அரங்கநாதன், திருமுருகன்,ஓ வெங்கடா ஜலபதி, நகரச் செயலாளர் ஏ.பி.செந்தில், ஒன்றியச் செயலாளர்கள் பொய்யூர் பாலசுப்பிரமணியம், செல்வராசு அதிமுக நிர்வாகிகள் ஏ.பி. ஜோதிவேல், தளபதி கணேசன், கே.கருணாநிதி, உட்பட பலரும் கலந்து கொண்டு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.





