• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் பக்கோடவை காண்பித்து வாக்கு சேகரிப்பு.

இன்னும் 6 -நாட்களே வாக்குச் பதிவுக்கு எஞ்சிய சூழலில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திக்கனாங்கோடு சந்திப்பில் இன்றைய பிரச்சாரம் துவங்கியது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மற்றும் காங்கிரஸ் திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாக்கு சேகரிப்பதற்காக புளியமூடு,கருங்கல்,சடையன் காடு,வெட்டுவிளை, நடுத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற நமது காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் விஜய் வசந்த்திற்க்கு பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் இருந்து வெளியில் வந்து கையை அசைத்து தங்களது வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்தனர். மேலும், மேளதாளங்கள் முழங்க பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை அளித்து வாயால் வடை சுட்டு வருகின்றார். இதனை எடுத்துக்காட்டும் விதமாக வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் பக்கோடவை பொது மக்களிடம் காண்பித்து இதுதான் மோடி சுட்ட வடை என தெரிவித்தனர்.

இன்றைய பரப்புறையின் போது வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய வசந்த். நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகின்றது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல்.

ஏழை மக்களை வஞ்சித்து பணக்கார முதலாளிகளான அதானியையும், அம்பானியையும் வாழவைக்க கார்ப்பரேட்டுக்கு துணை போகும் பாஜக அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

ஏழை மாணவர்களின் கல்விக் கடனையும், விவசாயிகளின் விவசாய கடனையும் ரத்து செய்ய மறுத்த இந்த பாஜக அரசு அதானிக்கும், அம்பானிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களை மேலும், மேலும் பணக்காரர்களாக மாற்றி வருகின்றது.

ஆனால் நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அன்றாட தேவைகளுக்கான பொருட்களை பொது மக்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை பல மடங்கு உயர்ந்து விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றது. மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ருபாய்க்கு விற்ற அவலம் பாஜக ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.

அதற்கு நீங்கள் அனைவரும் நமது அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது இந்தியா கூட்டணிக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும்.

நமது குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காகவும் நமது மண்ணில் ஒற்றுமையாக வாழ நினைக்கும் மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஏமாற்று வாதிகளை விரட்டி அடிப்பதற்கும் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் உங்கள் வீட்டுப் வளம் பிள்ளையான எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என விஜய் வசந்த் வாக்கு கேட்டார்.