கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆரோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்தார்.

அப்போது செப் 17 முதல் அக் 2 வரை இருவார சேவை மூலம். நலதிட்டம் வழங்குவது குறித்த கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்துள்ளோம் எனவும், பிரதமர் மோடி பிறந்தநாள் முதல் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வரை நலதிட்டங்கள் இந்த இரு வாரங்களில் வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேட்டியளித்த நயினார் நாகேந்திரன் , OPS கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நான் காரணம் என்று தினகரன் எப்படி சொல்கின்றார் என செல்லவில்லை எனவும், என்ன காரணத்தை சொல்லி சொல்கின்றார் என தெரியவில்லை, நான் இன்னும் அவரது பேட்டியை பார்க்க வில்லை என தெரிவித்தார்.
பாஜக எப்பொழுதும் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று தான் நினைக்கின்றது என தெரிவித்த அவர், எனது தனிப்பட்ட எண்ணம் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும், ஒரு இடத்தில் கூட யாரும் வேண்டாம் என்று சொன்னது இல்லை , எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்று தான் சொல்லி வருகின்றேன் எனவும்,
டிடிவி தினகரன் சொல்லும் குற்றச்சாட்டுக்கு பொறுப்பு ஏற்க முடியாது என தெரிவித்தார்..
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் டிடிவி இருந்தார்கள். அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் 165 இடங்களில் போட்டியிட்டு இரு சதவீதம் வாக்குகளை வாங்கினார்கள், நாங்கள் அவர் சொல்வதைப் போல குறை சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். டிடிவி எதனால் அப்படி சொல்கிறார் என தெரியவில்லை எனவும்,
அவர் (OPS) சொல்லி இவர் பேசுகின்றாரா என தெரியவில்லை, ஆனால் டிடிவி செல்லும் குற்றச்சாட்டுக்கு பொறுப்பு ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

செங்கோட்டையன் மீது அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறார், அது அவர்களது உட்கட்சி பிரச்சனை, அதைப்பற்றி கருத்துச் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார். என்றுமே பாஜக அடுத்த கட்சி விவகாரங்களில் தலையிடாது, ஏப்ரல் 12 ஆம் தேதி கூட்டணி குறித்து பேசும் பொழுது அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார் எனவும், அது அவர்கள் கட்சி பிரச்சனை என சொல்லியிருக்கிறார் என தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்தும் யாரையும் நாங்கள் எப்படி வெளியேற்ற முடியும், அவரது கட்சியை நாம் எப்படி வெளியே போக சொல்லலாம், அவர் (டிடிவ) மீது மரியாதை வைத்திருக்கிறோம், எல்லோரும் ஓன்றாக வந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் எனவும் தெரிவித்தார்.திமுகவை வீழ்த்த வேண்டாம் என்று நினைத்தால் அது அவர்கள் விருப்பம், இதைத்தான் நான் ஆரம்ப முதலே சொல்லி வருகிறேன் என தெரிவைத்தார். குறிப்பாக டிடிவியுடன் கூட்டணி வேண்டும் என்று அன்று முதல் இன்று வரை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சி செய்வீர்களா என்ற கேள்விக்கு, இதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார். அவர் வந்தால் நல்லது அவர் வரவேண்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம், தனிப்பட்ட முறையில், திமுக வரவேண்டாம் என நினைத்தால் அவர்கள் இந்த கூட்டணிக்கு வர வேண்டும் நான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கிறது. அதற்குள் கூட்டணிக்கு வருவார்கள் என தெரிவித்த அவர், விமர்சனங்களை தாங்கினால்தான் வளர முடியும், பழுத்த மரம் தான் கல்லடி பட முடியும் எனவும் தெரிவித்தார்.
அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை, தினகரன் எங்களுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இல்லை, ஓபிஎஸ் பாராளுமன்றத் தேர்தலில் இல்லை, இதையெல்லாம் வைத்து ஒரு முடிவு செய்து விட முடியாது எனவும். தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக ,அதிமுக, பாரிவேந்தர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் , புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். கண்டிப்பாக அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்வோம் என தெரிவித்த அவர், டிடிவி என்ன நிபந்தனை கொடுத்தார் என்பதை கேட்டு சொல்லுங்கள் பதில் சொல்கிறேன் எனவும் பதில் அளித்தார்.
தமிழகத்தில் பாலியல் வன் முறை அதிகரித்துள்ளது, 24 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை போலீஸ் சரியில்லை, முதல்வர் சரியில்லை எனவும் குற்றம் சாட்டினார். திமுக கூட்டணியில் வெளியில் இருந்து கட்சிகள் வருகிறது வரவில்லை என்பது வேறு, இதற்கு மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள் எனவும், மக்கள் ஓட்டு போடும் போது தேர்தல் அன்று ஒரு முடிவு செய்திருப்பார்கள் அதை பார்த்துதான் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.
மாநிலத் தலைவராக அண்ணாமலை செயல்பாட்டிற்கும், உங்கள் செயல்பாட்டிற்கும் வித்தியாசம் இருப்பதாக கட்சியினர் சொல்வதாக கேட்ட கேள்விக்கு, ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை என பதில் அளித்தார்.
தென் மாவட்டங்களில் அதிமுக , பா.ஜ.க கூட்டணி செல்வாக்கு இழுந்து விடுமா , நேற்றைய தினம் செங்கோட்டையில் சொல்லியிருக்கிறார் என்ற கேளவிக்கு , எதை மையப்படுத்தி சொல்கிறார் என தெரியவில்லை என பதில் அளித்த அவர்,
தேர்தலில் முடிவுகள் ஜாதியை மையப்படுத்தி இருக்காது எனவும் பதில் அளித்தார்.
அதிமுக பெரிய கட்சி அகில இந்திய அளவில் பாஜக பெரிய கட்சி எனவும், மாநிலத்தில் முதல்வராக வரக்கூடியவர் தேசியகட்சியுடன் தொடர்பில் இருந்தால்தான் நன்மைகளை பெற முடியும் எனவும், இப்போது தமிழகம் நிறைய திட்டங்களை பெற முடியாமல் இருக்கிறது. வருங்காலத்தில் பிரதமர் மோடியை நம்பி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் . அதற்கு அனைவரும் ஒன்றாக வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
செங்கோட்டையனை பாரதிய ஜனதா கட்சி இயக்குகின்றதா என்று கேள்விக்கு ,
பாரதிய ஜனதா கட்சி யார் பின்னாடியும் இல்லை, யாரையும் தவறாக இயக்கவில்லை, என்னை பொருத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என பதில் அளித்தார். எனது மகன் நயினார் பாலாஜி , நான் மாநிலத் தலைவராக வருவதற்கு முன்னால் முன்னரே பாஜகவில் இருக்கிறார் எனவும் இது வாரிசு அரசியல் கிடையாது எனவும் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்ததார்.