மக்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 15.07.2025 அன்று தொடங்கி வைக்கபட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று(ஜூலை_23)ல் நாகர்கோவில் மாநகராட்சி 34 – வது வார்டுக்குட்பட்ட மக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் K.P ரோடு கோபால பிள்ளை மருத்துவமனை எதிர்புறம் உள்ள ஜெபமாலை மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டு பொதுமக்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார். உடன் மாநில மகளிரணி செயலாளர் திருமதி. ஹெலன் டேவிட்சன், பகுதி செயலாளர் ஜீவா மாநகர பொருளாளர் சுதாகர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்செல்வின் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.