கிராமப்புற மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்க முயலும் விடியா திமுக அரசைக் கண்டித்து, இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், NDA கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இதில் பேசிய தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் தெம்பா இருங்கள் தைரியமாக இருங்கள் கவலைப்பட வேண்டாம் விரைவில் அதிமுக ஆட்சி அமையும் நம் கவலையெல்லாம் தீரும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து மக்களுக்கு தேவையான பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் காவேரி குண்டார் இணைப்பு நடைபெறும் , தற்பொழுது விடியா திமுக அரசு உங்கள் கணக்கில் ஐந்தாயிரம் போட்டுள்ளது. அதனை பெற்றுக் கொண்டு வழக்கம்போல் அதிமுகவிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அதேபோல் விடியா திமுக வினர் வாக்கு கேட்டு உங்கள் வீட்டுக்கு வரும் பொழுது எங்கே விடுபட்ட ரூபாய் 50,000 என கேட்க வேண்டும் என்றார்.
பின்னர் விடியா திமுக அரசை எதிர்த்து கோஷமிட்டனர் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பதுமாநகர நகர செயலாளர்கள் பாஸ்கர், எஸ் ஏ எஸ் சேட்டு என்ற அப்துல் ரகுமான், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






