விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ஆலங்குளம் டி.என்.சி. மூக்குரோட்டில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் செயல் பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக மத்திய அரசு ஊதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் திமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.4034 கோடி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். கையில் மண்வெட்டி, தட்டு உள்ளிட்ட பெருட்களுடன் பெண்கள் போரட்டத்தில் கலந்து கொண்டனர்.