மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள வீரத் தியாகிகள் மணிமண்டபத்தில் தென்றல் பவுண்டேஷன், IPC சர்ச் மற்றும் மதுரை சந்தியா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, நிலக்கோட்டை D32 பல் மருத்துவமனை, இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமை தென்றல் பவுண்டேஷன் மேனேஜிங் டிரஸ்டி ராஜசேகர், பெருங்காமாநல்லூர் IPC சர்ச் பொறுப்பாளர் பெஞ்சமின், உசிலம்பட்டி ரிலீப் ப்ராஜெக்ட்ஸ் இந்தியா பொது மேலாளர் நெல்சன் சந்திரசேகர், திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி, ஆகியோரின் முன்னிலையில் சேடப்பட்டி ஒன்றிய சேர்மன் ஜெயச்சந்திரன் முகாமை துவங்கி வைத்தார்.
இந்த முகாமில் சந்தியா மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் மற்றும் மேலாளர் கோகுல்நாத்,டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், நிலக்கோட்டை D32 பல் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் கண்டறிதல், காது மூக்கு தொண்டை பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு பொதுவான நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இம் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.





