கோவை, சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா மார்க்கெட்டில் புதிய கடைகள் கட்டாத நிலையில் புதிய கட்டணம் உயர்த்தி ஏலம் விட்டதை கைவிட வலியுறுத்தி 300 – க்கும் மேற்பட்ட அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் ஏற்கனவே 150 கடைகளை காலி செய்ய சொல்லிவிட்டு 80 புதிய கடைகளை மட்டுமே கட்டி உள்ள நிலையில் தற்போது மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் காலி செய்ய சொல்லி மாநகராட்சி வலியுறுத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர். அப்படி கடைகளை காலி செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் தற்போது கடைகளை கட்டிக் கொடுக்காமல் பத்து ரூபாய் வாடகை வசூலித்து வந்த நிலையில் தற்போது 150 ரூபாய் உயர்த்தி வாடகையை கட்ட வியாபாரிகளை வலியுறுத்தி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். அனைத்து வியாபாரிகளுக்கும் புதிய கடையை கட்டிக் கொடுத்தால் மட்டுமே புதிய வாடகையை கட்டுவோம் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.