சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரியில். தினம், தினம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அவர்கள் தங்கி செல்லும்.நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண கட்டணம் வகையிலான தங்கும் விடுதிகள். தமிழக அரசின் மற்றும் கேரள அரசின், தமிழக சுற்றுலா வாரியத்தின் தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை 500_கும் அதிகமாக உள்ளது.

அனைத்து வகையான தங்கும் விடுதிகளில் இருந்து வெளி வரும் கழிவுநீர் அத்தனையும் கடலில் சென்று கலப்பதால். கடல் நீர் சுகாதார கேடு ஏற்படுவதுடன்.கழிவு நீர் கடலில் கலப்பதால். கடற்கரையை பயன்படுத்தும் அனைவருக்கும் சுகாதார கேடு ஏற்படுவதையும், குறிப்பாக கடலில் மீன் பிடி படகுகள் கட்டப்பட்டிருக்கும் பகுதியில் கடலில் கழிவு நீர் கலப்பதால் மீனவர்களுக்கு பல்வேறு வகையான சொரி, சிறக்கும் வருவதாக குற்றம் சாட்டும் கன்னியாகுமரி பகுதி மீனவர்கள், இதற்கு கண்டனம் தெரிவித்து அண்மையில், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலயமுற்றத்தில் ஒரு கண்டன உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர்.
நெல்லைக்கு அரசுப் பணியாக வந்துள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என.நேருவை. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் , கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணி உபால்ட், துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன் ஆகியோர் இன்று (மே.30) அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்,கழிவு நீர்
சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ரூ.15 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்ய துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக
உத்தரவை வழங்கினார்.