• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

மண்டைக்காடு பகவதி அம்மன் பொங்கல் விழா..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக சுமங்கலி பூஜை இன்று(செப்டம்பர்_11)ம் நாள் இரவு விமர்சையாக நடைபெறுகிறது-

இதில் உலக நன்மைக்காகவும், பெண்கள் அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டியும், அனைவரது குடும்பங்களும் தழைத்தோங்கி வளர, வாழ்வில் எல்லாவித நன்மையும், பெற்று வாழ வேண்டியும் சிறப்பு பூஜையில் கைலாய மலையில் சிவனும்-பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளிக்கும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது-

அப்போது பெண்கள் லலிதா சஹஸ்ரம நாமம் கூறி தங்கள் கழுத்தில் திருமாங்கல் தாலிக்கயிற்றை கட்டி அம்பாளை வணங்கினர்-இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.