• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் கள்ளக் காதலியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது

BySeenu

Mar 16, 2024

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன்‌ வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH WATER MEATER என்ற நிறுவனத்தில் தினக் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே உள்ள பேச்சிமுத்து என்பவர் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக குடியிருந்து கொண்டு செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வசந்தகுமாரிக்கும், பேச்சிமுத்துவிற்கும் கடந்த இரண்டு வருடமாக தகாத உறவில் இருந்து உள்ளனர். சில மாதங்களாக வசந்தகுமாரி வேறு சில நபர்களுடன் போனில் பேசி வந்ததை பேச்சிமுத்து கண்டித்து உள்ளார். இந்நிலையில் நேற்று 15.03.2024 ஆம் தேதி 9.30 மணிக்கு இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்பொழுது பேச்சிமுத்து வசந்தகுமாரியை கட்டையால் பின்னந் தலையில் அடித்து மற்றும் அரிவாளால் பலமுறை வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வசந்தகுமாரி உயிரிழந்து உள்ளார். வசந்தகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் வசித்து வரும் கவிதா என்பவரும் வசந்தகுமாரியின் மூத்த மகன் ஸ்ரீராம் என்பவரும் கதவைத் தட்டி உள்ளனர். வெளியே வந்த பேச்சி முத்து, வசந்தகுமாரியை கொலை செய்து விட்டதாக கூறி உள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக மதுக்கரை காவல் துறையினர் பேச்சிமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.