
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படத்தில் சாதி ரீதியான உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக, திரைப்படம் வெளியாகும் முன்பே எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் படம் இன்று வெளியானதை தொடர்ந்து நாகர்கோவில் வடசேரி பகுதியில் மாமன்னன் திரைப்படம் வெளியான திரையரங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
