• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மகா கும்பாபிஷேகம் அமைச்சர் பங்கேற்பு..,

ByKalamegam Viswanathan

Jun 9, 2025

மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம், கருப்பாயூரணி செந்தமிழ் நகர் சிந்தனையாளர் நகர் , எம்.எஸ்.பி. அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் , செந்தமிழ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய‌ ப்ரதிஷ்டா அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர், மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி மூர்த்தி தலைமை தாங்கினார். இந்த விழாவில், முன்னதாக ,
கடந்த சனிக்கிழமை சிவாகம சிரோமணி சிவாகம கலாநிதி ராஜா பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விக்னேஸ்வரா பூஜை நவகிரஹ ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து , ஞாயிறு காலை 10.45.மணியளவில் ராஜா பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி புனித நீரானது கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு தரிசனம் செய்த பக்தர்களுக்கு புனித தீர்த்த வாரி தெளிக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக சித்தி விநாயகர் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில், அப்பகுதி மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏறாளமான பக்தர்கள் பெருந்திரளாக வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக் குழுவினர் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குழுத் தலைவர் சுதாகரன், செயலாளர் சபரி நிவாஸ், பொருளாளர் ராஜமாணிக்கம் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் பாரதி முருகானந்தம் கண்ணன், அழகர்சாமி கண்ணன், மாதவன், சோனைமுத்து, தர்மலிங்கம், செல்வராஜ், பொன்ராஜ், செல்வி, சாந்தி, கௌதம் , கணேசன் ஆகியோர் தலைமையில் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.