நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாதவராயர் பாலர் பள்ளி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
மாதவபுரம் மாதவராயர் பாலர் பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, பாலர் பள்ளி மன்றத்தலைவர் ரெத்தினசுவாமி தலைமை வகித்தார். செயலாளர் பி.கிருஷ்ணசுவாமி வரவேற்றார். புதிய கட்டடத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ் திறந்து வைத்து 50 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி நகர்மன்றத் தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நகராட்சி கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், லிங்கேஸ்வரி மணிராஜா, வழக்கறிஞர் பா.மகேஷ், நித்யா லிங்கசாமி, சுஜா அன்பழகன், டெல்பின் ஜேக்கப், ஆட்லின் சேகர், ராயப்பன், திமுக நிர்வாகிகள் எஸ்.அன்பழகன், மணிராஜா, எம்.ஹெச்.நிசார், சகாய ஆன்றனி, வழக்கறிஞர் ஷேக், முட்டப்பதி தர்மகர்த்தா பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாதவராயர் பாலர் பள்ளி மன்ற இணைச் செயலாளர் சுகேஷ் நன்றி கூறினார்.