• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மடீசியா பிரிண்ட் இன் பேக் தொழில் நுட்ப கண்காட்சி

ByKalamegam Viswanathan

Dec 23, 2024

மதுரை சிந்தாமணி சுற்று சாலை தனியார் ஹாலில் நடைபெற்ற மடீசியா பிரிண்ட் இன் பேக் தொழில் நுட்ப கண்காட்சியில் உள்ளூர் முதல் உலக தொழில்நுட்பங்கள் நிறைந்த பதிப்பக இயந்திரங்கள் கண்காட்சி நடைபெற்றது.

3 நாட்கள் நடைபெற்ற 127 அரங்குகள் 18, ஆயிரம் பார்வையாளர்கள் 100 கோடி வரை வர்த்தக பரிவர்தனை கண்காட்சியில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் வர்த்தக அமைப்பின் சார்பில் பிரிண்ட் – இன் – பேக் எனும் வர்த்தக கண்காட்சி மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள ஐடா ஹாலில் நடைபெற்றது.

இதில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் கொல்கத்தா மற்றும் வெளிநாட்டு நுட்பங்கள் நிறைந்த நவீன பதிப்பக இயந்திரங்கள், தொழில்நுட்ப கருவிகள், ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றது.

உள்ளூரில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கான தயாரிப்பு தேதி, எடை , காலாவதி தேதி ஆகியவைக்கு உடனடியாக பிரிண்ட் செய்ய கையடக்க பிரிண்ட் மிஷின் சில்லரை வியாபாரிகளுக்கான வரப்பிரசாதம்.

20 நிமிடங்களில் ஐடி கார்டு பிரிண்ட் செய்யும் இயந்திரம். புதிய தொழில் முனைவோருக்கான நவீன சோலார் இயந்திரங்கள் வீடு, மற்றும் தொழிற்கூடங்கள் அமைக்க கண்காட்சி அரங்கம்.

மதுரை சுற்றுச்சாலையில் உள்ள வேலம்மாள் ஐடாலில் மதுரை சிறு குறுதொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் பிரின்டன் பேக் கண்காட்சி கடந்த 21ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்றது.

127 அரங்குகளில் பிரிண்ட் அண்ட பேக் தொழில் துறைக்கான கண்காட்சியில் ரூபாய் 50 ஆயிரம் முதல் 50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் இடம் பெற்றது. 21ம் தேதி துவங்கிய கண்காட்சி 3 நாட்கள் 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

மதுரையில் நடைபெறும் தென் தமிழகத்தில் நவீன பிரின்ட் அன் பேக் தொழில் வர்த்தகத்திற்கான கண்காட்சியில் மதுரை மட்டுமல்லாது விருதுநகர் சிவகங்கை இராமநாதபுரம் கன்னியாகுமரி தேனி திண்டுக்கல் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 18,000 மேற்பட்ட பார்வையாளர்கள் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் மூலம் 100 கோடிக்கான வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் காலங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விருதுநகர் தொழில்நுட்ப பூங்கா திருநெல்வேலி ஐடி பூங்கா உள்ளிட்ட தொழில்துறைகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு அனைத்து வகையானபிரிண்ட் அண்டு பேக்கிங் மூலப்பொருட்கள் தயாரிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் கண்காட்சியின் மூலம் தொழிலதிபர்களுக்கான தொழில்துறை இயந்திரங்கள் மூலப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

மதுரை மலேசியா சார்பில் பிரின்ட் அண்ட் பேக் 3 நாட்கள் கண்காட்சியினைதலைவர் கோடீஸ்வரன் வர்த்தக குழு தலைவர் பொன் குமார் மற்றும் பொதுச் செயலாளர் வாசுதேவன் .மலேசியா துணைத் தலைவர் சந்திரசேகரன் சேலர் செந்தில்குமார் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.