
பியானோ சாதனையாளரும் இசையமைப்பாளருமான லிடியன் நாதஸ்வரம் தற்போது மோகன்லால் நடித்து வரும் ‘பரோஸ்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அதேசமயம், இளையராஜாவிடம் இசையைக் கற்று வருகிறார். இந்த நிலையில், இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இளையராஜா பியானோ வாசிக்க.. லிடியன் கிடார் வாசிக்கும் புகைப்படங்களுடன் “என்னுடைய இசை ஆசிரியர் இளையராஜா என்னிடம், ‘நான் அவரது முதல் மற்றும் ஒரே மாணவன்’ என்றார்.
