மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரில் பெண் ஆட்டோ டிரைவர் லூர்து மேரியின் நலதிட்ட உதவிகள் செய்து வருகிறார்.
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லூர்து மேரி (வயது 62). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிகிறார். மேலும், இப்பகுதி மக்களுக்கு கொரோனா காலங்களில் இருந்து சமூக சேவைகள் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு, இப்பகுதியில் உள்ள பெண்கள் ஆயிரம் பேருக்கு சேலைகள் வழங்கினார். இது குறித்து லூர்துமேரி கூறுகையில், இப்பகுதியில் உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா காலங்களில் இருந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறேன் .

என் ஊர், என் மக்கள் நலமுடன் இருக்க என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். நாடு என்ன செய்தது என எதிர்பார்க்காமல் என்னால் நாட்டுக்கு முடிந்த அளவு உதவி செய்கிறேன் என குறிப்பிட்டார்.

பெண் ஓட்டுனரின் சமூக சேவையை இப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். மேலும் கூட்ட நெரிசலை தடுக்க ஒவ்வொரு தெருவில் உள்ளவர்களுக்கும் நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட நேரத்தில் வருபவர்களுக்கு மட்டும் சேலை வழங்கி கூட்டத்தை கட்டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.