நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டனா பகுதியில் புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளுக்காக சேலத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு லாரி முலம் சிமெண்ட் கற்கள் ஏற்றி வரப்பட்டுள்ளது.

லாரியினை வைப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி தஞ்சாவூர், நாகை புறவழிச்சாலையில் சிக்கலைத் தாண்டி வந்த போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமலிருக்க லாரியை திருப்பி உள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள வயல் பள்ளப்பகுதியில் தலைக்குப்புற விழுந்துள்ளது.

இதில் லாரியின் முகப்பு கண்ணாடி உடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் கிளிநர் சிறிய காயத்தோடு உயிர் தப்பினர். லாரி தலைக்குப்புற விழுந்ததில் லாரியில் இருந்த சிமெண்ட் கற்கள் வயல்வெளியில் சிதறியது. சிமெண்ட் கற்களை அப்புறப்படுத்தி லாரியை கிரேன் மூலமாக மீட்டனர். இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர்.