தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செருவாவிடுதி
கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் கவிமணி தம்பதியரின் குழந்தைகளான ஜனனி அதிதி என்ற பெண் குழந்தைகள் உள்ளனர் இவர்கள் பட்டுக்கோட்டை உள்ள தனியார் பள்ளியில் ஜனனி நான்காம் வகுப்பு அதிதி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இரண்டு பேருக்கும் சிறுவயது முதலில் படம் வரைவதும் அது போல்
பெற்றோர்கள் கொடுக்கும் பழைய நாணயங்கள் முதல் புதிய நாணயங்கள் வரை சேகரித்து வைத்துள்ளனர் இந்த . நாணயங்களில் உள்ள தலைவர்கள் பெயர்களை சொல்லி அசத்தி வருகின்றனர். இந்த தம்பதிகள் போல் குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுத்தால் இந்த குழந்தைகள் போல் மற்ற குழந்தைகளும் சிறுசேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொள்வார்கள்.

இது குறித்து சிறுமிகள் ஜனனி அதிதி கூறும் போது எங்கள் ஊர் செருவாவிடுதி என்றும்
நாங்கள் பழைய கால நாணயங்கள் முதல் புதிய நாணயங்கள் சேர்த்து வைத்திருக்கிறோம் என்றும் அந்த நாணயத்தில் காந்தி நேரு அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்கள் பெயர் எங்களுக்கு தெரியும் என்று கூறினார்கள்..