சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலக நண்பர்கள் திட்டமும் கலைமகள் ஓவிய பயிற்சி பள்ளியும் இணைந்து ஓவிய பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நூலக அடையாள அட்டையும் புத்தகமும் வழங்கும் விழா கலைமகள் ஓவிய பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் முனைவர் ப.நாகராஜன் தலைமை தாங்கி மாணவ, மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டையையும் புத்தகங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.


மேலும் வாசிப்பின் அவசியத்தையும் நூலகங்களின் அவசியத்தையும் பற்றி தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர் நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர் எழுத்தாளர் அ. ஈஸ்வரன் வாழ்த்தி பேசினார். நூலகத்தை பயன்படுத்துவோம் வாழ்வில் வெற்றி கொள்வோம் என்று நூலகத் தன்னார்வளரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளருமான ந. ரமேஷ் கண்ணன் பேசினார். நிறைவில் ஓவிய பயிற்சி பள்ளி ஆசிரியர் முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார். இதில் தமிழ் அறிஞர் ஞானபண்டிதன் மற்றும் ஓவிய பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.









