உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் விதமாகவும், சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடத்தை உருவாக்கும் விதமாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த தோவாளையில் ஜீவகாருண்ய விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை,தேசியப் பசுமைப் படை கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் எக்ஸ்ரனோரோ இன்டர்நேஷனல் சென்னை ஆகிய கூட்டு இதயங்கள் சார்பில் பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு சிட்டுக்குருவி செயற்கை கூடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இவற்றை பாதுகாக்கும் விதமாக அப்பகுதியில் உள்ள மரங்களிலும் வீடுகளிலும் செயற்கை சிட்டுக்குருவி கூடுகளை கட்டி தொங்க விட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு இதை விநியோகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவற்றை பாதுகாப்பது நமது தலையாயக் கடமை எனவும் தெரிவித்துள்ளனர்.*