அதிமுக என்பது எங்களுடைய இயக்கம் எனவே கூட்டணியை பற்றி நாங்கள் தான் முடிவு பண்ணுவோம். பாஜக மதவாத கட்சி என்று கூட்டணியை பிளவு படுத்த நினைக்கும் ஸ்டாலினிக்கும் அவரது சகாக்களுக்கும் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். திமுக 1999-ல் ஏன் பாஜகவுடன் கூட்டனி வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

எனவே அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து திமுக காரர்களுக்கு பயம் வந்து விட்டது.
மேலும் திமுக ஆட்சி அமைத்து நான்கு வருடங்களுக்கு பிறகு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் 46 – கோரிக்கை மனு பெறப்பட்டு வருகின்றனர். ஆகவே நான்கு வருடமாக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.