சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில்
சட்ட பள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
இவ்விழாவின் தலைமை விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி என் கோடீஸ்வர் சிங் கௌரவ விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு மணிந்திர மோகன், ஸ்ரீ வஸ்தா கலந்து கொண்டனர்,

மேலும் இவ்விழாவில் திருமதி புஷ்பா, ஐசரி வேலன் தமிழ் வழக்குரை போட்டியில் வெற்றி பெற்ற சட்ட க்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தனர்,
மேலும் இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் அவர்கள் பேசுகையில்
உலகத்தின் ஆகச் சிறந்த கல்வித்துறை சட்ட துறை எனவே அத்துரையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் துறை சார்ந்த நாட்டம் துறை சார்ந்த அறிவு உங்களை வாழ்வின் அடுத்த கனத்திற்கு அழைத்துச் செல்லும் என கூறி வாழ்த்து தெரிவித்தார்,

மேலும் இவ்விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி கோடீஸ்வர் சிங் அவர்கள் பேசுகையில்
சட்டம் என்பது வெறும் பட்டம் பெறுவது மட்டுமல்ல சட்டத்தின் ஆளுமை பற்றி ஆழ்ந்த அறிவை பெறுவதே சட்டக் கல்வியின் உரிய நோக்கம் என்று வலியுறுத்தினார் விடாமுயற்சி கடின உழைப்பு அர்ப்பணிப்பு ஒழுக்கம் நிலைப்புத் தன்மை இக்கால வழக்கறிஞர்களுக்கு தேவையான முக்கிய மதிப்பீடுகள் என தெரிவித்தார் வழக்கறிஞர்களுக்காக காத்திருக்கும் புதிய வேலை வாய்ப்புகளை குறித்து எடுத்துரைத்தார்,
மேலும் மாணவர்கள் நவீன செயற்கை நுண்ணறிவு திறன்பட பயன்படுத்தி தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் இந்திய அரசியல் சாசனம் அனைத்தும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கருவூலமாக இருக்கிறது என்று நீதி பரிபாலனை சமத்துவம் சகோதரத்துவம் நீதி நெறி என்பதே பல வேறுபாடுகளை கடந்து அனைத்தும் ஒன்றிணைந்து சாதிக்க திகழ்கிறது என்று கூறினார்,

மேலும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட தலைமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு மணி என்ற மோகன் ஸ்ரீ வர்ஷா அவர்கள் பேசுகையில்
சட்டக் கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து விவரித்து பேசினார் மேலும் சட்ட பேராசிரியர்கள் வழக்காடும் பணிகளை விடுத்து கற்றுக் கொடுக்கும் பணியை செய்வதால் அவர்கள் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக அவர்களை பாராட்டியதோடு வழக்கறிஞர் தொழில் பணம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல அது சமுதாயத்திற்கு தேவையற்றதும் ஒரு தொழில் என்பதை தெளிவாக வலியுறுத்தினார்,
மேலும் இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் தனியார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் முனைவர் பிரீத்தா கணேஷ்
சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரத சக்கரவர்த்தி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் கலைமதி
மற்றும் 2000-க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி பயிலும் மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.