அரியலூரில் நடந்த ,கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 வது கட்ட விரிவாக்க துவக்க விழாவில் ,அமைச்சர் சா சி சிவசங்கர் பங்கேற்று 16525 பயனளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.


அதனையடுத்து,அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரம் அன்னலட்சுமி இராஜபாண் டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு, மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் கு.சின்னப் பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் 16,525 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, கோட்டாச்சியர்கள் ஆர். ஷீஜா, பிரேமி , அரியலூர் நகர திமுக செயலாளர் இரா.முருகேசன், நகர்மன்ற த்தலைவர் சாந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) த.மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .பரிமளம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டாச்சியர் முத்து லெட்சுமி, ஒன்றிய திமுக செயலாளர்கள் தெய்வ இளைய ராஜன் , மா.அன்பழகன் , கோ.அறிவழகன், உடையார் பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




