சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்த காவலருக்கு மதுரை மாடக்குளத்தில் 21 குண்டு முழங்க அரசு மரியாதை இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட ஏராளமான காவலர்களும் உறவினர்களும்
மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த காவலர் கணபதி, கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி கோவில் திருவிழாவை முடித்துவிட்டு மதுரையை நோக்கி தனது மனைவியோடு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வத்தலகுண்டு சாலையில் குளத்துப்பட்டி பிரிவு என்னும் இடத்தில் வந்த போது இவர் ஓட்டி வந்த இரு இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணபதி படுகாயம் அடைந்தார் அவருடைய மனைவி லேசான காயமடைந்த நிலையில் காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பித்தனர். இதனுடைய விபத்து படுகாயம் அடைந்த கணபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் கணபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
இந்த நிலையில் லேசான காயங்களுடன் தப்பிய அவரது மனைவி சங்கீதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து இறந்த கணபதியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டுவரப்பட்டது அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் சொந்த ஊரான மாடக்குளத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது
அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை நிலையிலிருந்து மாடக்குளம் வரை அவருடன் பயின்ற மற்றும் அவரோடு பணியாற்றிய காவலர்கள் என ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கண்ணீர் மல்க ஊர்வலமாக அவரது உடலை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர்
முன்னதாக இறந்த காவலரின் தாய் தந்தை இரண்டு தங்கைகள் என உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பிறகு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு விபத்தில் பலியான காவலர் கணபதிக்கு இறுதி அஞ்சலி(அரசு மரியாதை) செலுத்தப்பட்டது
கணபதியோடு பணியாற்றிய காவலர்கள் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த காவலர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது
இறுதி அஞ்சலியில் ஆயுதப்படை டிசி திருமலை குமார் உட்பட , ஏ.சி , ஆய்வாளர்கள் மற்றும் சார்பு
ஆய்வாளர்கள் என ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
விபத்தில் படுகாயம் அடைந்த காவலருக்கு அரசு மரியாதையோடு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் ஏராளமான உறவினர்களும் பொதுமக்களும் காவலர்களும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்போரை வேதனை அடையச் செய்தது
மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த காவலர் கணபதி, கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி கோவில் திருவிழாவை முடித்துவிட்டு மதுரையை நோக்கி தனது மனைவியோடு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வத்தலகுண்டு சாலையில் குளத்துப்பட்டி பிரிவு என்னும் இடத்தில் வந்த போது இவர் ஓட்டி வந்த இரு இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணபதி படுகாயம் அடைந்தார். அவருடைய மனைவி லேசான காயமடைந்த நிலையில் காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பித்தனர். இதனுடைய விபத்து படுகாயம் அடைந்த கணபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் கணபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் லேசான காயங்களுடன் தப்பிய அவரது மனைவி சங்கீதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து இறந்த கணபதியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் சொந்த ஊரான மாடக்குளத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.
அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை நிலையிலிருந்து மாடக்குளம் வரை அவருடன் பயின்ற மற்றும் அவரோடு பணியாற்றிய காவலர்கள் என ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கண்ணீர் மல்க ஊர்வலமாக அவரது உடலை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர்.
முன்னதாக இறந்த காவலரின் தாய் தந்தை இரண்டு தங்கைகள் என உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பிறகு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு விபத்தில் பலியான காவலர் கணபதிக்கு இறுதி அஞ்சலி(அரசு மரியாதை) செலுத்தப்பட்டது.
கணபதியோடு பணியாற்றிய காவலர்கள் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த காவலர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இறுதி அஞ்சலியில் ஆயுதப்படை டிசி திருமலை குமார் உட்பட , ஏ.சி , ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் என ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

விபத்தில் படுகாயம் அடைந்த காவலருக்கு அரசு மரியாதையோடு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் ஏராளமான உறவினர்களும் பொதுமக்களும் காவலர்களும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்போரை வேதனை அடையச் செய்தது.